Skip to content

2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

  • by Authour

சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடத்தன் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது… நான் தமிழக மக்களையும், சென்னையையும் மிகவும் நேகிக்கிறேன். வெற்றி நாயகனாக விவேகானந்தர் சென்னையில் வரவேற்கப்பட்டார்.  தமிழ்மொழி , தமிழ் பாரம்பரியத்தை விரும்புகிறேன். விவேகானந்தர் இல்லத்தை காண கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. விவேகானந்தரின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அனைவருக்கும் சமமான நிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேறும். பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய இந்தியாவை நினைத்து விவேகானந்தர் பெருமைப்படுவார்.  உலக நாடுகளை நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் எதிர்க்கொண்டு வருகிறோம்.  தற்போது பெண்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.  உலகிலேயே மிகச்சிறந்த அறிவியலுக்கான, தொழி்நுட்ப களம் இங்குள்ளது.   உலக தரத்திலான கல்விக்காக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.  2047க்குள் தனிபெரும் தேசமாக இந்தியாவை உருவாக்குவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!