அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,31,291 ஆண் வாக்காளர்களும், 1,32,760 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 9 பேர் என மொத்தம் 2,64,060 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,31,149 ஆண் வாக்காளர்களும், 1,33472 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 10பேர் என மொத்தம் 2,64,631 வாக்காளர்கள் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 5,28,691 உள்ளனர். இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலை, அரியலூர் கோட்டாட்சியர் மணிகண்டன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்காளர் இறுதிப்பட்டியலை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.