2020ல் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. அதில் இந்தியாவின் சார்பில் 124 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அத்துடன், சாய்கோம் மீராபாய் சானு, பளுதூக்குதல் பெண்கள் பிரிவில் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார், இந்த ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 48வது இடத்தை பிடித்தது.
ஆனால் இந்த(2024) பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை இலக்க பதக்கம் பெற வேண்டும் என்பதே இந்தி்யாவின் லட்சியமாக இருந்தது. நீரஜ் சோப்ரா, மனு பாக்கர், சிந்து ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹாக்கியில் பதக்கம் கிடைக்கும் என்ற உறுதியும் இருந்தது. அதுபோல துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் கண்டிப்பாக இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருப்பதாக நம்பினர். ஆனால் இந்த முறை இந்தியாவுக்கு தங்கம் கிடைக்காததால் பதக்கப்பட்டியலில் 71வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியா ஒலிம்பிக்கில் பின்னடைவை சந்தித்ததற்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவர் பி.டி. உஷா பொறுப்பேற்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து நாளை தெரி்யவரும். இதற்கிடையே வினஷே் போகத் பிரச்னை குறித்து பி.டி. உஷா கூறியதாவது:
மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டில் எடையை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள் இல்லை அவர்களுடைய பயிற்சியாளர்கள் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டுமே தவிர இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தால் நியமிக்கப்பட்டுள்ள தலைமை மருத்துவ அதிகாரி கிடையாது. நாங்கள் வைத்திருக்கும் மருத்துவ குழு ஏதேனும் வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்கள். மருத்துவர் இல்லை என்றால் எங்கள் குழு அவர்களை கண்காணித்து உதவி செய்யும். மேலும் வீரர்கள் காயமடைந்தால் அவர்களை எவ்வாறு மீண்டும் தகுதி பெற வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கொடுக்கும். ஆனால் இது தெரியாமல் இந்திய ஒலிம்பிக் சம்மேளன மருத்துவக் குழு மீது அனைவரும் குற்றம் சாட்டுவதை என்னால் ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். அவரது கருத்தும் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி் உள்ளது. எனவே வி்ரைவில் பி.டி. உஷாவை நீக்கிவிட்டு வேறு தலைவரை நியமித்தால் தான் அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப்பட்டியலில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று கருத்து பலமாக வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் இந்த முறை ஒரு தங்கம் வென்று விட்டதால் இந்தியாவை விட பதக்கப்பட்டியலில் முந்தி விட்டது . அத்துடன் 32 வருடத்தில் இப்போது தான் பதக்கப்பட்டியலில் இந்தியா பாகிஸ்தானுக்கும் கீழே சென்று உள்ளது.