Skip to content
Home » 2024 மக்களவை தேர்தல் மூலம் இந்தியாவுக்கு விடியல் ஏற்படும்….. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2024 மக்களவை தேர்தல் மூலம் இந்தியாவுக்கு விடியல் ஏற்படும்….. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண விழா சென்னை கொரட்டூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:
1980 ம் ஆண்டு பரிதி இளம் வழுதியை முதன் முதலில் சிறையில் சந்தித்தேன். ஈரோடு இடைத்தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் ஈரோடு இடைத்தேர்தல் வேலைகளுக்கு நடுவே ஒருநாள் விடுமுறை கேட்டு, அனுமதி பெற்று இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு உடனே ஈரோட்டுக்கு புறப்பட்டு செல்வார்கள், அவர்கள் புறப்படுகிறார்களா என்று கண்காணிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். கலைஞர் கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் ‘பேனா.

திமுக துணை அமைப்பாக இளைஞரணியை உருவாக்கினார் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. இளைஞரணிக்கு தலைவராக தம்மை நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் அனைவரும் பேசினார்கள். திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமனமாகி படிப்படியாக உயர் பதவிக்கு வந்தேன். ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே; ரூ.15-வது போட்டீர்களா? மதுரை எய்ம்ஸ் என்னாச்சு,  பிரதமே அடிக்கல் நாட்டியும்இன்னும் எய்ம்ஸ் வரல. நம்முடைய தம்பி  உதயநிதி  ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு வந்து  பாராளுமன்றதேர்தல் பிரசாரம் செய்தார். அதற்கு பிறகாவது வெட்கம் வரவேண்டாமா? சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.  வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள், அது என்னாச்சு? எந்த கேள்விக்கும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. 2021ம் ஆண்டு தேர்தல் மூலம் தமிழகத்திற்கு விடிவு ஏற்பட்டது. 2024 தேர்தல்  மூலம் இந்தியாவுக்கு விடியல் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *