Skip to content

December 2023

இன்றைய ராசிபலன் … (19.12.2023)

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு மாலை 06.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொருளாதார பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில்  வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாலை நேரத்திற்கு பிறகு சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். சிம்மம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு மாலை 06.21 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். துலாம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும்.  அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். மகரம் இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் கிட்டும். மீனம் இன்று உங்களுக்கு நெருங்கியவர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வேலையில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

  • by Authour

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து,… Read More »சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் … Read More »பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இங்கு ஒரு பாம்பு,… Read More »காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் படுகளம் வனப்பகுதியில் இன்று காலை சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனத்தின் அருகே சாய்ந்தவாறு  தூக்கில் தொங்கியபடி பிணமாக இருப்பதைப் பார்த்து மணப்பாறை… Read More »மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை வழங்க கோரி திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவிடைமருதூர் அருகே… Read More »இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

மக்களை காப்பதே அரசின் நோக்கம் …. நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

நெல்லையில் குடியிருப்புகளை மழை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பொதுமக்கள் மீட்கப்பட்டு 245 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த 30 மணி… Read More »மக்களை காப்பதே அரசின் நோக்கம் …. நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…

கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை மகாமகத்திற்கு முன்பு போடப் பட்டதாகும். அதன் பின்னர் இந்தச் சாலை… Read More »குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…

error: Content is protected !!