Skip to content

November 2023

அரசு பள்ளியில் மரங்களை வளர்த்து வரும் பசுமைப்படை மாணவர்கள்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளியாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை… Read More »அரசு பள்ளியில் மரங்களை வளர்த்து வரும் பசுமைப்படை மாணவர்கள்…

இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

  • by Authour

கரைவழியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால், கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்றச்செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா மூட்டைகள், விசைப்படகு… Read More »இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை-அவினாசி சாலையில் உள்ள பீளமேட்டில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கல்லூரியில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும்… Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

  • by Authour

கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் உடல் கருகிய நிலையில் 30- வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அரவக்குறிச்சி காவல்… Read More »கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

திரிணாமுல் காங். எம்.பி. மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்களவை உறுப்பினருக்கான… Read More »திரிணாமுல் காங். எம்.பி. மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை?

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி… Read More »21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ரூ.1000 மதிப்பிழப்பு…. 7 ஆண்டுகள் நிறைவு…. பிரதமர் மோடிக்கு காங். கண்டனம்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு  ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகும்நிலையில்… Read More »ரூ.1000 மதிப்பிழப்பு…. 7 ஆண்டுகள் நிறைவு…. பிரதமர் மோடிக்கு காங். கண்டனம்

கனமழை…..5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (09-11-.2023) நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்… Read More »கனமழை…..5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32ஆயிரம் கனஅடியாக உயர்வு

  • by Authour

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும்.  ,இதன் மொத்த கொள்ளளவு… Read More »பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32ஆயிரம் கனஅடியாக உயர்வு

இன்றைய ராசிபலன்…. (09.11.2023)

வியாழன்… மேஷம் இன்று பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். கடகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். சிம்மம் இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. கன்னி இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகமின்றி காணப்படுவீர்கள். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மகரம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மீனம் இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.

error: Content is protected !!