Skip to content

September 2023

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி புகைப்படத்துடன் ‘இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்… Read More »இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…

ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தம்..

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில்… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தம்..

இன்றைய ராசிபலன்… (03.09.2023)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். மிதுனம் இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வர வேண்டிய பணவரவில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பின் ஈடுபட்டால் அனுகூலம் உண்டாகும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.38 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளியாட்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. துலாம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். தனுசு இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். கும்பம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மீனம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியின் செயலாளராக முத்துசெல்வன் (45) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வன் கலைஞரின்… Read More »திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் காசவளநாடு புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகானந்தம். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

லியோ படத்தில் நடிக்க மறுத்த விஷால்…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான்,… Read More »லியோ படத்தில் நடிக்க மறுத்த விஷால்…..

நடிகர் தனுஷ் சரக்கு அடிப்பாரா? உண்மையை போட்டுடைத்த நடிகர் ரோபோ சங்கர்..

நடிகர் தனுஷ் பற்றி அடிக்கடி சில பரபரப்பான தகவல் கிளம்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என சில பத்திரிகையாளர்கள்… Read More »நடிகர் தனுஷ் சரக்கு அடிப்பாரா? உண்மையை போட்டுடைத்த நடிகர் ரோபோ சங்கர்..

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி… Read More »தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

error: Content is protected !!