Skip to content

August 2023

இன்றைய ராசிபலன்… (02.08.2023)

மேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. கடகம் இன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிம்மம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும். கன்னி இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். துலாம் இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால்  அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. விருச்சிகம் இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தனுசு இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளால் மன அமைதி குறையும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உத்தியோக ரீதியான பணிசுமை படிப்படியாக குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும். மகரம் இன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். கும்பம் இன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும். மீனம் இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி… Read More »கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல் – மடக்கி பிடித்த போலிசார்…

கோவை போத்தனூர் போலிசார் வெள்ளலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலிசார் முற்பட்ட போது லாரி நிற்காமல்… Read More »புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல் – மடக்கி பிடித்த போலிசார்…

மலேசியாவில் பாரா எறிபந்து பந்தயம்.. தங்கம் வென்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி வீரர்…

மயிலாடுதுறையை சார்ந்தவர் கார்த்திக் மாற்றுத்திறனாளி ஆன இவர், மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் பாரா விளையாட்டுப் பந்தயங்களில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர்… Read More »மலேசியாவில் பாரா எறிபந்து பந்தயம்.. தங்கம் வென்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி வீரர்…

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது….

மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்… Read More »2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது….

பாஜ நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காரணம் “சரக்கு வீடியோ”..

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் எஸ்.சுப்பையா. இவர் நங்கநல்லூரில் கட்சிஅலுவலகம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில், இவரது ஓட்டலில் சுப்பையா நண்பர்களுடன் அமர்ந்து பல்வேறு சைடிஸ்களுடன் மதுபானம் அருந்துக்கொண்டிருந்தார். இந்த… Read More »பாஜ நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காரணம் “சரக்கு வீடியோ”..

93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

  • by Authour

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்… Read More »93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Authour

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “எனது… Read More »திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.  இந்த வீடியோவை அவர்… Read More »தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

error: Content is protected !!