Skip to content

August 2023

இன்றைய ராசிபலன்…. (04.08.2023)….

மேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிட்டும். ரிஷபம் இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தினரால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும். கடகம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம். சிம்மம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கன்னி இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். துலாம் இன்று உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மனஅமைதி குறையும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். தனுசு இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மகரம் இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கும்பம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். மீனம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அஇஅதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன் இன்று மாலை இளங்குடிபட்டி அய்யனார் கோவில் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தற்சமயம் அவரது மனைவி முத்துலெட்சுமி… Read More »புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் சித்தர்கள் மகா குரு பூஜை விழா..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் ஆடி 18ஐ முன்னிட்டு ஆதி அறப்பளீஸ்வரர் உடனுறை தாயம்மாள் சன்னதியில் மகா குரு பூஜை விழா நடைபெற்றது. காலை ஐந்து முப்பது மணி அளவில்… Read More »கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் சித்தர்கள் மகா குரு பூஜை விழா..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவில் தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்சி ஏர்போட்டில் ரூ.11லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.11லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…..பரபரப்பு… வீடியோ…

  • by Authour

கோவை, குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45) . இவர் நேற்று இரவு தனது காரில் வீட்டில் இருந்து ஆர்.புரம் சென்றார். டிபி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே சென்ற… Read More »கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…..பரபரப்பு… வீடியோ…

ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

  • by Authour

ஆகஸ்ட் 5″ஆம் தேதி நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் பேட்டி…. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள்… Read More »ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…

மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு முன்பட்ட குறுவைப் பருவத்திற்கு 34,813 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 250 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என… Read More »மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

“ஜாக்சன் துரை-2” … படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர்… Read More »“ஜாக்சன் துரை-2” … படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…

  • by Authour

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224… Read More »அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…

error: Content is protected !!