Skip to content

June 2023

இன்றைய ராசிபலன்….(25.06.2023)…..

இன்றைய ராசிபலன் –  25.06.2023 மேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது. மிதுனம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். கடகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சிம்மம் இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும். துலாம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும். விருச்சிகம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும். தனுசு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நெருக்கடிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். மகரம் இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கும்பம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.52 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்….(25.06.2023)…..

மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது..

வெளிநாட்டில் வேலைபார்த்த வந்த கணவன் அனுப்பிய பணத்தில் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படாததை அறிந்து மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன்னிடம்… Read More »மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது..

அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முதலில் ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் காவேரி மெடிக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

விஜய் குறித்து அவதூறு…. பாஜ., பெண் நிர்வாகி மீண்டும் கைது…

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை… Read More »விஜய் குறித்து அவதூறு…. பாஜ., பெண் நிர்வாகி மீண்டும் கைது…

கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு… Read More »கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

  • by Authour

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022–23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு… Read More »12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

”தண்டட்டி” திரைப்படம் எப்படி இருக்கு…?..

  • by Authour

முதல் காட்சியிலேயே ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள் சுப்ரமணியை(பசுபதி)அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எதையும் வித்தியாசமாக செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் நபராக சுப்ரமணியை காட்டியிருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கிடாரிபட்டியில் இருந்து… Read More »”தண்டட்டி” திரைப்படம் எப்படி இருக்கு…?..

இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில்… Read More »இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தும் இடையூறு மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு பல… Read More »கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

error: Content is protected !!