Skip to content

June 2023

டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர்… Read More »டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்… கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிரமம் ஊராட்சி என்.மணக்குடியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிரமம் ஊராட்சி செயலராக உள்ளார். இவரது மகன்கள் சூரியபிரசாத் (16) பிளஸ் 1-ம், உதயபிரசாத் (14) பத்தாம் வகுப்பும் கொல்லங்குடியில்… Read More »ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்… கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி..

இன்றைய ராசிபலன்…. (27.06.2023)

மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கடகம் இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். சிம்மம் இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. கன்னி இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும். துலாம் இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். தூர பயணங்களில் சற்று கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தனுசு இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மகரம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுத்துவது நல்லது. பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மீனம் இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

ராஜினாமா செய்யப் போகிறேன்… மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ ஆரம்பித்த காலம் முதல் அவருடன் பயணிப்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன். வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில்… Read More »ராஜினாமா செய்யப் போகிறேன்… மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே, 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி… Read More »சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலி பணியிடம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலியாக உள்ள மூன்று திறன்பெறா உதவியாளர் (UNSKILLED ASSISTANT) பணியிடம் நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில்… Read More »கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலி பணியிடம்…

போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

  • by Authour

இங்கிலாந்து நாட்டின் லண்டன், பர்மிங்கம், பொர்னிமவுத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில்… Read More »போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான… Read More »விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவ தேர்வு ( ஏப்ரல் 2023) முடிவுகளை தேர்வு நெறியாளர் மலர்விழி வழங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

error: Content is protected !!