Skip to content

June 2023

பெரம்பலூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை வழக்கில் பெண் உட்பட 7 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் இவர் சினிமா படங்களை இயக்கி உள்ளார்.அதோடு, பல குறும்படங்கள் எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் மீது, பெரம்பலூர் காவல் நிலையத்தில்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை வழக்கில் பெண் உட்பட 7 பேர் கைது…

இன்றைய ராசிபலன் –  08.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். மிதுனம் இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. கடகம் இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சிம்மம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். கன்னி இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஒரளவு குறையும். எதிலும் நிதானம் தேவை. துலாம் இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. விருச்சிகம் இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தனுசு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு  சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகரம் இன்று உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக செய்யும் செயல்களில் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். கும்பம் இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். மீனம் இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும்… Read More »கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

குடும்ப தகராறு….. திருச்சியில் வாலிபர் தற்கொலை…

திருச்சி அன்பு நகர் 11வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜானிட் (வயது 33).இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 6 மாதம் கழித்து குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை… Read More »குடும்ப தகராறு….. திருச்சியில் வாலிபர் தற்கொலை…

கவிதை-பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவிக்கு விருது …

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவி யாழினி தர்மபுரி மாவட்டத்தில் இணையதளம் வழியாக நடைபெற்ற கவிதை ,… Read More »கவிதை-பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவிக்கு விருது …

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அப்பல்லோ மருத்துவனை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்… Read More »திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து….

செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இன்று (07.06.2023) தலைமைச் செயலகத்தில், தனக்கு அன்புப் பரிசாக அளிக்கப்பட்ட புத்தகங்களை செய்தித்துறையின் கீழ் செயல்படும் நினைவகங்களில் உள்ள நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்… Read More »செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

10-12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில்,  சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத் துறையின்… Read More »10-12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

திருச்சி மாநகரம் மாவட்டம் மற்றும் திருச்சி சரக அளவிலான காவல்துறையினரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

error: Content is protected !!