Skip to content
Home » ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும்  2023 அக். 7, கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக ரூ. 3.56 லட்சம் கோடி அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அக். 31, 2023 அன்று ரூ. 6,970 கோடி அளவிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வராமல் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

’இதன்படி, மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பிப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி  ஒரு அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *