நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியது. சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 465 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை வெளிமாநிலங்களுக்கு
அனுப்பும் பணியை உணவுத்துறை துவக்கியுள்ளது. அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு திருக்குவளை கீழ்வேளூர் வலிவலம் சாட்டியகுடி நாகை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி மற்றும் கோவில்பத்து தானியக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 மெட்ரிக் டன் A, கிரேடு சன்னாரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நாகை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதனை நாகையில் இருந்து சரக்கு ரயில் மூலம் கோவை மற்றும் சின்னசேலம் ஆகிய பகுதிகளுக்கு அரவைக்காக இன்று அனுப்பி வைக்கப்பட்டன.