புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டிடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரில் தொடங்கி வைத்தார்.
Tags:முதல்வர் ஸ்டாலின்