மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை உட்கொட்டம் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டுபோவதபhக புகார் வந்தது. இதைதொடர்ந்து இக்குற்றவாலியை பிடிக்க வேண்டி மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் N.S. நிஷா IPS அவர்களின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை உட்ககோட்டம் துணைக் காவல்கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமாரின் அறிவுறுத்துதலின்படி இக்குற்றவாளியை பிடிக்க வேண்டி உதவி ஆய்வாளர்
திரு.A. இளையராஜா ஆத்மநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் S. ரமேஷ், தலைமை காவலர்கள் S. நரசிம்ம பாரதி, R. அசோக்குமார், S.செந்தில்குமார்
மற்றும் காவலர் R. கார்த்திக் ஆகிய 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, 92- கீழையூர், சந்திரன் , மகன் சதிஷ்குமார் (28) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்ததில் மேற்கண்ட குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் இவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து இவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதது. இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து விரைவாக குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.