கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா என்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் டாரஸ் டிப்பர் லாரியில் 20 மெட்ரிக் டன் அளவுள்ள சுண்ணாம்பு கல்லை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன். அந்த வாகனத்தில் கற்களை ஏற்றி செல்வதற்கான எந்த ஆவணமும் இல்லாததால் இது தொடர்பாக வெள்ளியணை காவல்துறையினருக்கு புகார் அளித்தார் பாலசுப்பிரமணி. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல்துறையினர் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கண்ட போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி சரோஜா என்பவருக்கு சொந்தமான லாரி என தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் அறிந்த சரோஜா தலைமறைவாகிவிட்டார். எனவே வெள்ளியணை காவல்துறையினர் லாரி டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். கடத்தி வந்த 20 மெட்ரிக் டன் சுண்ணாம்புக்கல்லுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும்,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.