Skip to content
Home » ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே  மேட்ச்சாக  மெல்போனில் நடக்கிறது.  இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.  அறிமுக வீரர்  சாம் கான்ஸ்டாசும், கவாஜாவும் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர்.

அப்போது இந்திய வீரர் விராட் கோலி  பீல்டிங்கில் நின்று கொண்டிருந்தார். பேட்டிங் செய்து விட்டு  இடம் மாறி வந்த  கான்ஸ்டாஸ் மீது  கோலி மோதினார். இருவரின் தோள்பட்டையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.  அருகில் நின்று கவாஜா  கோலியை சமாதானம் செய்து வைத்தார். இந்த நிலையில் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரருடன் மோதலில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது.