Skip to content

திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் கூலி தொழிலாளி இவருக்கும் கௌதம் பேட்டை பகுதி சேர்ந்த பீஸ் என்கிற சிவகுமார் (38) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இதன் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு கௌதம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (36) மற்றும் பசுபதி (28); ஆகியோருடன் இணைந்து திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியில் பீஸ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் ஏழு பேரை கைது செய்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பீஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் ராஜேஷ் மற்றும் பசுபதி ஆகிய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ஏக போக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

மேலும் 10,000 அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி மீனா குமாரி தீர்ப்பளித்தார்.

மேலும் அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டுகள் கூடுதலாக கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் பி.டி.சரவணன் ஆஜரானார்

error: Content is protected !!