திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் அருகே கீழ கோயில் பத்தில் நடந்த கூட்டத்திற்கு அம்மா பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் குமார் வரவேற்றார். தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தஞ்சை காமராஜ், தேவரத்தினம், மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் உட்பட பேசினர். இதில் அம்மாபேட்டை பேரூர் செயலர் ரமேஷ், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா உட்பட பலர் பங்கேற்றனர். கிளைச் செயலர் முருகையன் நன்றி கூறினார்.
