திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில் பப்பாளியில் இருந்து கூழ் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இன்று காலை இங்கு பணி நடந்து கொண்டிருந்தது. பழங்களை கூழாக்கி அதனை ஒரு தொட்டியில் சேகரித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியாற்றிய ஒரு தொழிலாளி உயரத்தில் இருந்து பப்பாளி கூழ் தொட்டிக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற இன்னொரு தொழிலாளியும் கூழ் தொட்டிக்குள் விழுந்தார்.
உடனடியாக எந்திரத்தை நிறுத்தி, உள்ளே விழுந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். இருவரும் வட மாநில தொழிலாளர்கள் என்பது தெரியவந்து. தகவல் அறிந்ததும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.