ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷூ என்ற பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் 2 முறை ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முதலில் 6.9, அடுத்த முறை 7.1 ஆகவும் பதிவானது. இதைத்தொடர்ந்து ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கையும் விடுத்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். ஆனால் உடனடியாக சுனாமி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.