இந்தியாவில் கடந்த 2017 மார்ச்சில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டது. புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் 2018 முதல் 2,000 ரூபாய் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், வரும் 23ம் தேதி தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை ஒரு நபர் மாற்றலாம் என தெரிவித்துள்ளது.