நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள் பயிற்சியாளருக்கு தெரியாமல் நேற்று கடலுக்கு சென்று குளித்தனர். இதில் 3 பேர் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விஷ்வா (11), வீரமலை (13) ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
