Skip to content
Home » +2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் கிருபாகரன் (19 ). இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையின் இனிப்பு கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இனிப்பு கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் காணமல் போனது. இதனால் மகனை தாய் திட்டியுள்ளார் .இதில் ஆத்திரமடைந்த கிருபாகரன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் வந்த கணவன்… மனைவி கண்டித்ததால் தற்கொலை…

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்தவர் சபீர் (51). குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு சபீர் குடிபோதையில் வந்துள்ளார் .இதை அவரது மனைவியும் மகனும் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சபீர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து  பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *