Skip to content
Home » காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென்று அலையில் சிக்கினர். இதல் பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாறையில் சிக்கி ஸ்ரீவிஷ்ணு உயிரிழந்தார். காரைக்கால் அடுத்த புதுத்துறை பகுதி சேர்ந்த ரமேஷ் மகன் நிசன்ராஜ் (17). 12ம் வகுப்பு படித்து வந்த இவர், காரைக்கால் கடலில் நேற்று குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார்.