Skip to content

மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

  • by Authour
ஜெபக்கூட பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர்பலி.. திருச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். திருச்சி பிராட்டியூர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான ஜெபக்கூடம் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக புனரமைப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடந்து வருகிறது. இதில் கட்டடத்தின் மொட்டை மாடியில் “”தகரஷெட்” அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கோபி (34), பாக்கியராஜ் (21), சிவக்குமார் (40), நடராஜன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். பிற்கபலில் நடந்த பணியின்போது, தகர ஷெட் அமைப்பதற்காக சுமார் 25 அடி உயரமுள்ள இரும்பு ஏணியை பயன்படுத்தினர். அதை கோபி, பாக்கியராஜ், சிவக்குமார் ஆகியோர் தள்ளிக்கொண்டு சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏணி சாய்ந்து, மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து கோபி, பாக்கியராஜ் இருவரும் உடல்கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வக்குமாருக்கு மின்சாரம் பாய்ந்ததில் உடலில் தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தீபற்றி எறிந்து கொண்டிருந்த சிவக்குமாரை மீட்டு ஆசுவாசப்படுத்தி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இறந்த கோபி, பாக்கியராஜ் ஆகியோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஒப்பந்தம் மூலம் நடந்த இந்த பணியில், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு சாதனங்களான கையுரைகள், தலைக்கவசங்கள், கயிறு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. கையுறைகள் அணிந்திருந்தால் மின்சாரம் பாய்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என போலீஸôர் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டு பணம் திருச்சி பன்னாட்டு விமான நிóலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லவேண்டிய ஏர் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் ஆண் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் மறைத்து அமெரிக்கா நாட்டு பணத்தாள்களை (டாலர்ஸ்) முறைகேடாக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெப்பம்… கோர்ட்டில் மயங்கிவிழுந்த இருவர்  திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குமாஸ்தா மற்றும் விசாரணைக்கு வந்த பெண் இருவரும் வெப்ப அலை தாக்கம் காரணமாக வியாழக்கிழமை மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை ஒன்றுக்காக வந்து காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வெளியில் வந்த வழக்குரைஞரிடம் குமாஸ்தாவாக பணியாற்றும் மாணிக்கம் என்பவரும் திடீரென மயங்கி விழுந்தார். அவரும் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருவரும் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலை தாக்கத்தால் மயங்கி விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த இருவேறு சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்து. இதில் மயங்கி விழுநந்த இருவரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பஸ் ஜப்தி திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனர். திருச்சி சோமரசம்பேட்டையை அருகேயுள்ள நாடார் சத்திரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவர் கடந்த 16.3.2020 அன்று தன் தாய் மற்றும் தாத்தாவுடன் அல்லித்துறை }திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், விக்னேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு திருச்சி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் 11.12.23 அன்று அளிக்கப்பட்ட தீப்ப்பில், விக்னேஷ் குடும்பத்துக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 400 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீட்டை வழங்கவில்லை. இதையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு, விக்னேஷ் குடும்பத்தார் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காததால், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.
error: Content is protected !!