சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர். இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர். விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்……விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
- by Authour
