Skip to content

திருச்சியில் பெண்ணிடம் கத்தி முனையில் நகைபறித்த 2 பேருக்கு…. 7 ஆண்டு சிறை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி தமிழ்மணி (27). இவர் கடந்த 5.8.2016 அன்று, திருச்சி பாரதிசாசன் பல்கலைக்கழகம் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை நிர்மல்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். பல்கலைக்கழகம் அருகே வந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் காரை மடக்கி நிறுத்தியுள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி, தமிழ்மணி அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலி, ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து நவல்பட்டு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டதில், தஞ்சாவூர் அரிசிக்காரத் தெருவைச் சேர்ந்த எஸ். அருள்பிரகாசம் (30), வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த எஸ். மணிகண்டன் (30), திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெ. பாஸ்கரன் (30) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா, நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அருள், மணிகண்டன் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.2 ,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறினார். பாஸ்கருக்கு ரூ.5,000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது, அதை கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை என உத்ரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில், வழக்குரைஞர் ஹேமந்த் ஆஜரானார்.

error: Content is protected !!