கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான வழிக்கு அழைத்த அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் அவருக்கு துணையாக உதவி பேராசிரியர் முருகன், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று 2வது மற்றும் 3வது குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுகிறார்கள் என நீதிபதி கூறினார். விடுதலையான இருவரும் நீதி வென்றது என கூறினர்.
இந்த நிலையில் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் கூறும்போது 2 பேர் விடுதலை குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.