Skip to content
Home » 2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டம் , மணல்மேடு அருகே   கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள   பாப்பாக்குடியில்  மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர் செல்வமணி ஆகியோர் பாப்பாக்குடி திரெளபதை அம்மன் கோயில் பகுதிக்கு சென்றபோது இரண்டு மாட்டுவண்டிகளில் கொள்ளிடம் ஆற்று மணல் இருந்ததைக் கண்டு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்,  மணல் ஏற்றுவதற்கான அனுமதியோ மணல்குவாரியிலிருந்து மணல் கொண்டுவந்ததற்கான எந்த ஆவணமும் இல்லை என தெரியவந்துது.

உடனயாக இரண்டு வாகனங்களை நிறுத்தி மணல்மேடு காவல்நிலையத்திற்குத் திருப்ப போலீசார் அறிவுறுத்தினர், வண்டி ஓட்டுனர்கள் தப்பியோடிவிட்டனர், இதைக்கண்ட பெண்கள் உட்பட ஊர்மக்கள் ஒன்று திரண்டனர்,  நடவடிக்கை எடுத்த போலீசாரை சகட்டுமேனிக்குத் திட்டியும் எங்கள் கோயில் தேவைக்குதான் நாங்கள் மணல் எடுத்துள்ளோம், விற்பனைக்கு எடுக்கவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,  மணல்வண்டிகளை எடுத்தச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று வாகனத்தை எடுக்கவிடாமல் மறித்தனர்.  இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது,  ஒருவழியாக இரண்டு வாகனங்களை போலீசார் கைப்பற்றி நிலையம் கொண்டு சென்றனர்.  இதுகுறித்து சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மணல்மேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில்   ஆசைத்தம்பி,   ராஜசேகரன்,   சரவணன்,  மீனா,   லதா,   சாந்தா,   வசந்தி ஆகிய 7பேர் மற்றும் பலர்மீதும் மாட்டுவண்டிகள்மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது,   போலீசை பணிசெய்ய விடாமல் தடுத்தது,  கனிமவள பாதுகாப்புச் சட்டப்படியும்  வழக்குப் பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் ஊர்மக்கள் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!