11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதம் 10ம் தேதி உதவித்தொகை கிடைக்கும். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும். எ்பபோதும் 15ம் தேதி தான் உரிமைதொகை கிடைக்கும். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 10ம் தேதி 1.15 கோடி பேருக்கு ரூ.1000 வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.