கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது.
எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து இரும்பு பைப்புகளை மேலே எடுக்கும் போது மேலே இருந்த மின் கம்பத்தில் மோதியதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிமிந்தப்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ் , முன்னுர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் எவ்வித காயம் இன்றி உயிர்த்தப்பினர். அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் உடலை பிரேத பரிசோதனைக்காக கருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.