திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி பரணி. இவருடைய தாத்தா காலத்திலிருந்து பசு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர். தற்போது பரணி ஐந்துக்கு மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஜெர்சி வகை பசுமாடு ஒன்று கருவுற்றிருந்த நிலையில் நேற்று ஒரே பிரசவத்தில் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதில் பசுங்கன்று,கெடேரி கன்று என இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. பொதுவாக பசு மாடுகள் ஒரு பிரவத்தில் ஒரு கன்று குட்டிக்கு மேல் ஈன்றெடுக்காது. லட்சத்தில் ஒரு சில பசுமாடுகள் தான் ஒன்றுக்கு மேற்பட்ட கன்றுகளை ஈன்றெடுக்கும்.தற்போது திருவாசியில் அதிசயமாக ஒரே பிரவத்தில் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதால் அதன் உரிமையாளார் மகிழ்ச்சியடைந்தார்.மேலும் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றெடுத்த பசுமாடும்,கன்று குட்டிகளும் நலமுடன் இருப்பதாகவும், ஒரே நேரத்தில் இரண்டு கன்று குட்டிகளும் தன் தாயிடம் பால் குடிப்பதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றெடுத்த ஜெர்சி வகை பசுமாட்டை ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
திருச்சி அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றிய பசு…
- by Authour
