திருச்சி கருமண்டபம் நியூசெல்வ நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராயர் ( 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய ராயர் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இப்புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் திருச்சி, கே. கே. நகர் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மனைவி அஷ்ரப்பேகம் (40). இவர் வீட்டை பூட்டிவிட்டு அவருடைய தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் பீரோவில் இருந்த 1/2 பவுன் நகை மற்றும் ரூ. 2 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
மேலும் சுந்தர நகர் 2-வது தெருவை சேர்ந்த எடிசன் (36) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூமிலிருந்த 1/4 பவுன் நகை மற்றும் ரூ. 1, 500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.