Skip to content

வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி திருவானைக்கோவில் வெள்ளிக்கிழமை சாலை கோலமாவு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ஜெயந்தி ( 19.). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பெற்றோருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்தார் . இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரைத் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து அவரது தாயார் தனலட்சுமி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார். இதேபோன்று திருச்சி பெட்டவாய்த்தலை தேவதானம் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் இவரது மகள் கௌசிகா இவர் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தந்தை கல்யாண சுந்தரம் கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *