மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு மையங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு; நாகை மாவட்டத்தில் 7071,மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 88,பறக்கும்படைகள் அமைப்பு;
12 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6, ம் தேதி வரை நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை மாவட்டத்தில், 71,பள்ளிகளை சேர்ந்த 7071,மாணவ, மாணவிகள் 33, தேர்வு மையங்களில் இன்று 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர், நாகப்பட்டினத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் பரிட்சை நடைபெற்ற இடங்களை தமிழக
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பழனிச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் இன்று காலை அம்மையங்களில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாணவ,மாணவிகள் எந்தவித குழப்பமும் இன்றி தேர்வு எழுதுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக அனைத்து மையங்களுக்கும் சென்று சோதளை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள 88, பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.