நீலகிரி மாவட்டம், உதகை அருகே + 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரியில்+ 2 பொதுத்தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். இந்நிலையில், உதகை அருகே மஞ்சூர் சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஏப்ரல் 27 ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 கணித தேர்வு நடந்தது. அப்போது ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது. மாணவர்கள் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வுசெய்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி கூறுகையில… கணித தேர்வில் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு உதவி உள்ளனர். மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்னன், துறை அலுவலர் செந்தில் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.