தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும், காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/டிஐஜிக்கள்.jpg)