Skip to content
Home » அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமம் பெரியேரி பகுதியில் வசித்து வந்தவர் சுப்ரமணியன் மகள் சந்திரா (45) இவர் இன்று மாலை அதே பகுதியில் உள்ள இளங்கோ என்பவரது வயலில் மேய்ந்த தனது ஆட்டை விரட்ட சென்றவர் வரப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து அலறியபடி கீழே விழுந்து துடி துடித்துள்ளார் இதை கண்ட சந்திராவின் தங்கை மகன் மணிகண்டன் (16) என்பவர் மின்சாரத்தை நிறுத்துங்கள் என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓடியவர் கீழே கிடந்த சந்திராவை தொட்டு தூக்கியுள்ளார். மணிகண்டன் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்து விட்டார். சம்பவ இடத்திலேயே சந்திரா இறந்துள்ளார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன மணிகண்டன் மயிலாடுதுறையில் தேசிய மேனிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *