பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
தற்போது, இப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது, அட ஆமாங்க…படம் வெளியான வெறும் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் உலக முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், பாகுபலியை மிஞ்சியதாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல இரண்டாவது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் படத்தை பார்த்த பலரும் 5க்கு 4-5 என ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.