வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்குத்திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது. சென்னையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
