சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை முதல் இரு நாட்களுக்கு மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களில், வரும் 24ம் தேதி வரை கன மழை நீடிக்கும். இன்று தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.