திருப்பத்தூரில் குடும்பத்தகராறில் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 14 மாத குழந்தை மித்ரா உயிரிழந்துள்ளார். மேலும் தந்தை சிவகுமார், மகள் இலக்கியா(4) ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மனைவி சத்யாவுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுக்கு விஷம் தந்து சிவகுமார் தற்கொலை முயற்சி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
