இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது. மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு 2 பஸ்கள் ஆற்றுக்குள் உருண்டு விழுந்தது. அந்த பஸ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
2 பஸ்களில் ஓட்டுனர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்திருந்தனர். இவர்களில் 7 பேர் இந்தியர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்சில் இருந்த மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது.