Skip to content
Home » வேலூர்…..2 சிறுவர்கள் கடத்தி கொலை…… கடன் தகராறில் கான்ட்ராக்டர் வெறி

வேலூர்…..2 சிறுவர்கள் கடத்தி கொலை…… கடன் தகராறில் கான்ட்ராக்டர் வெறி

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரான வசந்த்குமார் என்பவரும்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யோகராஜ்  என்பவரும்  நண்பர்கள்.

கட்டிட கான்ட்ராக்டர் வசந்த்குமார் என்பவருக்கு கடந்த அண்டு திருமணமான நிலையில் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வசந்தகுமார் மாதனூர் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளியான நண்பர் யோகராஜ் வீட்டிற்கு சென்று யோகராஜ் மனைவியிடம் பேசிவிட்டு கடைக்கு சிறுவர்களை அழைத்து செல்வதாக கூறி அவர்களின் இரண்டு மகன்கள் யோகித் (5 ) தர்ஷன் (4 ) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்

பல மணி நேரம் ஆகியும்வசந்தகுமார் வராத காரணத்தினால் அவர் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் ஆன நிலையில் யோகராஜ் தனது உறவினர்களுடன் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அனைத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கி மூலம் இரண்டு சிறுவர்களை இருசக்கர வாகனத்தில் நண்பனே கடத்தி சென்றுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து  போலீசாரும்  தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் வசந்தகுமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தில் செல்போன் டவர் மூலம் வசந்த் குமார்  இருப்பதாக போலீசார் கண்டுபிடித்தனர்.

சிறிது நேரம் கழித்து சிங்கல்பாடி எரிபட்டி கிராமத்தில் உள்ள கோவில் பின்புறத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் சடலம் அருகே வசந்தகுமார் அமர்ந்து இருந்ததும் பொதுமக்களை பார்த்தவுடன் வசந்தகுமார் அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே குடியாத்தம் மற்றும் ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்களின் சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தேடுதலின் போது வசந்தகுமார் தனது பாட்டி வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தவரை கண்டுபிடித்து  போலீசார் கைது செய்து  ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷிரியாகுப்தா தலைமையிலான குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நண்பனின் இரண்டு  மகன்களை  இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த பட்டதாரி காண்ட்ராக்டரால் இரவிலும் அந்த கிராம மக்கள் அச்சமடைந்து சோகத்தில் மூழ்கினர்

மேலும் கிராம மக்கள் கூறுகையில் கொலையாளி வசந்தகுமார் மனைவியை பிரிந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்

மேலும் கொலை செய்யபட்டு இறந்த சிறுவர்களின் உறவினர்கள் கூறுகையில் கோவில் அருகில்  சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் சிறுவர்களை நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் விசாரித்தபோது, கட்டிட தொழிலாளி யோகராஜ், கான்ட்ராக்டர் வசந்தகுமாரிடம்   ரூ.13ஆயிரம் கடன்  வாங்கி இருந்தாராம். அந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஏற்பட்ட பகையில் அவர் 2 குழந்தைகளை கடத்தி  கொலை செய்திருக்கலாம் என்று  தெரியவந்துள்ளது.  வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *