பூண்டி கொள்ளிடம் ஆற்றில் முழ்கிய 5பேரில் 3 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இன்று காலைஒருவரின் சடலம் மீட்கப்படடது.
சென்னை எழும்பூர் நேரு பார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் ஜான்சன் மகன்கள் பிராங்க்ளின் (23), ஆண்டோ (20), மற்றும் அவர்களது நண்பர்கள் ஜியாவுதின் மகன் கிஷோர் (எ)தமிழரசன் (20), சண்முகம் மகன் கலைவேந்தன் (20) ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மண்ட வெங்கடேஷ் ராவ் மகன் மண்ட மனோகர்(19)ஆகிய 5 பேருடன் மொத்தம் 17 பேர் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வந்தனர்.
அங்கு 7ம் தேதி தேர்பவனி பார்த்து விட்டு நேற்று காலை அவர்கள்பூண்டி மாதா கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்தனர். அவர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்று கரையில் சமையல் செய்ய ஏற்பாடுகளை செய்தனர் . சமையல் செய்து கொண்டிருக்கும் போது இந்த 5 இளைஞர்களும் அந்த பகுதியில் உள்ள சந்தனமாதா கோவில் அருகில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேரும் மூழ்கினர்.
இவர்களில் கலைவேந்தன் மற்றும் கிஷோர் (எ)தமிழரசன் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மற்ற 3 பேரையும் தேடியதில் நேற்று மாலை மனோகர் உடலை மீட்டனர்.
இருவர் உடல்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.நிகழ்விடத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் மிட்கப்பட்டகிஷோர் (எ) தமிழரசன், கலைவேந்தன் மற்றும் மனோகரன் உடல்களை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் கைப்பற்றி பூதலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அண்ணன், தம்பிகளான பிராங்க்ளின், ஆண்டோ ஆகியோர் கிடைக்கவில்லை. எனவே அவர்களை இன்று காலையும் தேடினர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் பிராங்க்ளின் சடலம், கிடைத்தது. அதன் பிறகு ஆண்டோ சடலம் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. இறந்துபோன பிராங்க்ளினுக்கு நேற்று பிறந்தநாள். பிறந்த தினத்திலேயே அவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது