திருச்சி -தஞ்சை சாலை அருகே அரசால் தடை விதிக்கப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தாராநல்லூரைச் சேர்ந்த சீனிவாசன் (23) மற்றும் உறையூரை சேர்ந்த தனக்கிட்டு ( 20 ) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 80 போதை மாத்திரைகள். 2 மருத்துவ ஊசிகள். ஒரு இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை காந்தி மார்க்கெட் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.