தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 4,107 தேர்வு மையங்களும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 4,591 பறக்கும்படைகளும் தேர்வு கண்காணிப்புபணியில் 48,700 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று காலை தமிழ்த் தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணிக்கு இன்றைய தேர்வு முடிகிறது. கரூர் மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களில் 12,019 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 9 மணிக்கே மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் தேர்வர்களை அறைக்குள் அனுப்பப்பட்டனர்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.