குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனையில் இன்று ஈடுபட்டார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார். வரும்15ம் தேதி இந்த திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து, அது கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணத்தை அரசு விளக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த பணம் 15ம் தேதி முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி நதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் கூறி உள்ளார்.